Tuesday, 9 December 2014

லிங்கா திரைப்படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கே அனுமதி


இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்ப்புள்ள படங்களில் லிங்கா முக்கியகமாக இருக்கும் படம். அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியே வெளியாவதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


எல்லா இடங்களில் அதிகாலை 4.30க்கு முதல் காட்சி அனுமதி கிடைத்துள்ளது. விடுவார்களா ரசிகர்கள் இன்னும் முயன்று நள்ளிரவு 2 மற்றும் 1 மணிக்கு அனுமதி வாங்கிவிட்டார்கள். இன்னும் சில முரட்டு ரசிகர்கள் நள்ளிரவு 12மணிக்கே அனுமதி வாங்கி அதற்க்கான டிக்கெட்டையும் பெற்று சந்தோஷத்தில் துள்ளிகுதித்த வண்ணம் இருகிறார்கள். 

தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகளுக்கு அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டது நாளை முதல் வழக்கமான முன்பதிவு தொடங்குகிறது. சென்னையில் இன்றே தொடங்கி முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் சத்தமில்லாமல் முன்பதிவை தியேட்டர் நிர்வாகங்கள் முடித்து விட்டது. 

No comments:

Post a Comment