Wednesday, 10 December 2014

லிங்கா ஹிந்தியில் 25ஆம் தேதி வெளியீடு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியுள்ள 'லிங்கா' திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள லிங்கா டிசம்பர் 12ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டும் ரிலீஸாகவுள்ளதாகவும், இந்தி 'லிங்கா' தாமதமாகும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

'லிங்கா'வின் இந்தி பதிப்பில் டப்பிங் பணிகள் இன்னும் முடியாததால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது. அனேகமாக இந்தியில் லிங்கா டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment