ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை லிங்கா படத் தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது. இதில் ரூ.5 கோடியை ரொக்கமாகவும், ரூ.5 கோடிக்கு வங்கி உத்தரவாதமும் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. நாளை பிற்பகல் 12 மணிக்குள் ரூ.10 கோடியை செலுத்த நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ரவிரத்னம் என்பவர் லிங்கா கதைக்கு உரிமைக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ரவிரத்னத்தின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் லிங்காவை வெளியிட மேற்கண்ட நிபந்தனையை விதித்துள்ளனர். லிங்கா திரைப்படத்தின் கதை தம்முடையது என்று ரவிரத்னம் தரப்பு வாதிட்டது, அதற்கு ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment