Thursday, 11 December 2014

பாலியல் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆன்லைனில் சக்கை போடு போடுகிறது

(Image dezeen)

பாலியல் தொடர்பான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே முன்னணியில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஹெல்த்கார்ட் தரப்பில், மும்பை,கொல்கத்தா,டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களின் கள்ளச் சந்தையில் மட்டுமே விற்கப்பட்டு வந்த பாலியல் பொருட்கள், ஆன் லைனில் தற்போது விற்கப்படுகின்றன.

வயது வந்தோருக்கான பாலியல் மருந்துகள், மாத்திரைகள், வயாகரா மற்றும் செக்ஸ் டாய்ஸ் ஆகியவை அதிக அளவில் வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றன. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இதற்கென செலவு செய்கிறார்கள்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 40% ஆக இருந்த லூப்ரிகான்ட்ஸ்,ஆணுறைகள், செக்ஸ் டாய்ஸ் விற்பனை ஆண்டு இறுதியில் 75% மாக உயர்ந்துள்ளது. அதே போல இந்த ஆண்டும் விற்பனை ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆன் லைன் விற்பனை, சுமார் 1,200 கோடி ரூபாயை தொடும் என்று தெரிகிறது. வரும் ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் வரை ஆன்லைன் மூலம் இந்த பொருட்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இரண்டாவது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனம் விற்பனை செய்யும் வைபரேட்டர்கள் அதிக அளவில் விற்பனையாகிறதாம். ஒரு வைபரேட்டரின் விலை ரூ.7000 வரை விற்பனையாகிறது. அதேபோல பெண்களை கவரும் சில செக்ஸ் டாய்ஸ்கள், 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே அயிட்டம்கள் அதிகம் விற்பனையாகிறதாம். இதுபோன்ற பொருட்களை கடைக்கு நேரில் சென்று வாங்குவதற்கு கூச்சப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஆன் லைன் வர்த்தகம்.


No comments:

Post a Comment