மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36) என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம். அப்போது பிளஸ் 2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டாராம். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ், திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனால் ஆசிரியை லட்சுமி நிலை தடுமாறி இருந்ததை பார்த்த சமமாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியை, தனக்கு காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி சுவாமிநாதன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாணவர் ஒருவர் ஆசிரியையை கன்னத்தில் அறைந்து காது ஜவ்வு கிழந்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment