படத்தின் ஆடியோ உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டுக்கான
உரிமைகள், சாட்டிலைட் உரிமை என
படத்தின் உரிமைகள் கிட்டத்தட்ட 200 கோடி வரை விற்பனையாகிவிட்டதாக வெளிப்படையாகவே பேசத்துவங்கிவிட்டனர்
திரைத்துறையினர். கூட்டி கழித்து பார்த்தால் எப்படியும் சில நூறு கோடிகளை
எட்டிவிடும் என்பது தான் 'லிங்கா' வின் கணக்கு.
இவ்வளவு பெரிய தொகைகளுக்கு படத்தின் உரிமைகள்
விலைபோனது 'லிங்கா'வுக்குத்தான். ரஜினியின் முந்தைய படங்கள் கூட ரிலீசுக்கு முன் இவ்வளவு
பெரிய தொகைக்கு விற்பனையாகவில்லை.
படத்தின் விற்பனைத் தொகை ஒரு சாதனை என்றால், மற்றொரு சாதனை படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை. கிட்டத்தட்ட 5 ஆயிரம் திரையரங்குகளில் 'லிங்கா' வின் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த அளவை யாரும் நெருங்கியது கூட இல்லை.
தமிழகத்தில் '700 தியேட்டர்கள் லட்சியம். 600 தியேட்டர்கள் நிச்சயம்' என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளது படத்தரப்பு. வெளிநாடுகளில் 200 தியேட்டர்களிலும் வெளியாகிறதாம் 'லிங்கா'.

No comments:
Post a Comment