சித்திரை
மாதம்தான் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன்
வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும் அனைவரும் விரும்புவது
உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதித்துகொள்வதில் வல்லவர்கள்.
ஒரு
லட்சியத்தை மனதில் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள்.
எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக
அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை. உங்கள்
முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு. இந்த வேகத்தை
செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ளவீர்கள்.
நீங்கள் ஒரு தொழிலதிபராக
இருந்தால் சகதொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். அப்போது அவர்கள்
உங்களை நெருப்பு போல நனைத்து ஒதுங்கிப் போவார்கள். உங்களை திட்டுவார்கள்.
இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை
செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு இருக்காது.
சூரியனின் பலத்தால் உங்களிடம் ஆற்றல் அதிகமாக இருக்கும். செவ்வாய் உங்கள் சக்தியை
வெளிப்படுத்தும். சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக்
கொடுப்பார். இன்னும் கொஞ்சநாள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று
ஒதுக்கிவைக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை.
பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள் அவசரமாக
முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும்.
முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும்.
சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது. இதற்கு
உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க
வேண்டும். வாரம் ஒரு முறையாவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி நீராடவேண்டும்.
சித்திரை
மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை, பாவனைகளில்கூட
கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்த கவர்ச்சியின் காரணமாக
மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை
புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம் ஆயுள் முழுவதும் நட்புடனும் உறவுடனும்
இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள் முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை
வெல்ல யாராலும் முடியாது.
உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால்
யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment