Fandry(ஆங்கிலத்தில்
Pig, தமிழில் பன்றி அர்த்தம்).
இது மராத்திய
சமுதாயத்தில் ஒரு கீழ் ஜாதி மாணவன் தன் வகுப்பில் படிக்கும் மேல் ஜாதி பெண்ணை
காதலிக்கிறான் என்று தொடங்கி மராத்திய சமுதாயத்தின் சிலபல விஷயங்களை பற்றி
பேசுகிறது.
படத்தின் கதாநாயகன்
Jabya (நிஜப்பெயர் - Somnath
Awghade) இன்னும் என் மனதில்
நிற்கிறான். இவன் மேல்ஜாதி மக்களை எதிர்க்க முடியாமல் அடங்கி போவது, கூனி
குறுகிப்போவது இறுதியில் ஆத்திரத்தில் பொங்கி ருத்ரதாண்டவம் ஆடுகிறான்.
படத்தின் கதாநாயகி Shalu (நிஜப்பெயர் - Rajeshwari Kharat) இந்தப்பெண்ணை
சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறது. தேவதை என்றுதான் சொல்லவேண்டும்.
நடிப்பிலும் மிளிர்கிறார்.
Jabya வின் தந்தை மனிதர் கதாப்பாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார். தமிழில் உள்ள
சில நல்ல இயக்குனர்கள் இவரை பயன்படுத்தினால் நிச்சியமாக பிரகாஷ்ராஜ் போல வர
வாய்ப்புகள் உள்ளது.
படத்தின் இயக்குனர் Nagraj Manjule கண்டிப்பாக இவர் பலே கில்லாடி சிறந்த மற்றும் நேர்த்தியான இயக்கம் மேலும்
இவர் சிறந்த கவிஞர் கூட.
படத்தில் வரும் தீம் மியூசிக் மெதுவாக
நமது எலும்புகளில் பாய்கிறது.
ஜாதி வெறி
பிடித்தவர்களே தயவுசெய்து இந்த படம் பாருங்கள். நீங்கள் ஜாதியை தூக்கிபிடித்தால்
இறுதியில் வந்துவிழும் கள் உங்கள் முகத்தில் விழுந்ததாக அர்த்தம்.
No comments:
Post a Comment