Saturday, 10 January 2015

2016 தேர்தலுக்கு ரஜினியும் லிங்காவும் முதல் பலி


முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ அவர்கள் ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டப் பட்டபோது. இனிமேல் தமிழகத்தை வழிநடத்த யார் இருகிறார்கள் என்று தமிழக ஊடகங்கள் மாறி மாறி கேள்விகளை கேட்டது.

திராவிடக்கட்சிகள் வலுவிழந்துவிட்டது, தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் பலம் இல்லை, இவர்களுக்கு மாற்றாக நினைத்தவர்களும் சரியாய் சோபிக்கவில்லை. அடுத்து யார் என்று மறுபடியும் கேள்வி எழுந்தது.

இந்த நிகழ்சிகள் நடக்கும்போது ரஜினி தனது “லிங்கா” படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். உடனே சுதாரித்த ஊடகங்கள் வழக்கம்போல் ரஜினி “தேரை” இழுத்து தெருவில் விட்டு வேடிக்கை பார்த்தது. ரஜினியும் வழக்கம்போல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டார்.

ரஜினியை ஜென்ம எதிரியாக நினைக்கும் ராமதாஸ் “ரஜினி ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

திடிரென்று சீமான் ரஜினி அரசியலுக்கு வரவேக்கூடாது. அப்படி வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று சம்பந்தமேயில்லாமல் அறைகூவல் விடுத்தார். அதையும் வழக்கம்போல் ரஜினி காதிலே கூட போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

பி.ஜெ.பி மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ரஜினி எங்கள் நண்பர் இல்லை இல்லை ரஜினி எங்கள் நண்பர் எங்களுக்குத்தான் ஆதரவு தருவார் என்று அறிக்கைகளை அடுக்கியது.

ஆனால் ரஜினியோ சொன்ன தேதியில் “லிங்கா” படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்.
கடந்த டிசம்பர் 12ஆம்  தேதி படம் வெளியாகி நல்ல வசூலை கொடுத்துகொண்டு இருக்கிறது. 

ஆனால் அடுத்த நான்காவது நாளில் படம் ஓடவில்லை என்று ஒரு கும்பல் youtube, whatsapp முலம் செய்திகளை பரப்பியது. கிறிஸ்மஸ் தினத்தில் நான்கு படங்கள் வந்தும் “லிங்கா” திரைப்படம் திரையங்கில் ஓடுகிறது.


இன்று திடிரென்று சீமான் மற்றும் வேல்முருகன் லிங்கா படத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளது பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது. இது 2016 தேர்தலை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியல் தாக்குதலா என்று சந்தேகப்பட வைக்கிறது. 

No comments:

Post a Comment