பகுதி 1
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மாணவர்கள் தேர்வு செய்யும் படிப்பு பெரும்பாலும்
பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், பெரியம்மாவின் பையன் சொன்னான், ஊரில் ஒரு பெரிய
மனிதர் சொன்னார், நண்பன் சொன்னான் என்றுதான் நாம் பெரும்பாலும் பொறியியல்
படிப்பில் சேருகிறோம்.
இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள் அவன்லாம் பொறியியல் படிக்கிறான் நான்
படிக்கக்கூடதா?, அல்லது என் பிள்ளை படிக்கக்கூடதா? என்ற வீராப்பில் சேர்ந்து
கடைசியில் சரியாகப் படிக்க முடியாமல் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு அல்லது
படித்து சரியான வேலை கிடைக்காமல் “ தவறாக இந்த படிப்பைத் தேர்ந்தேடுத்துவிட்டோமோ “
என்று விழிபிதுங்கி நிற்கும் பேர்வழிகள்தான் ஏராளம்.
போதாக்குறைக்கு வங்கியில் கடன் வேறு மூன்று முதல் நான்கு லட்சம் வரை கடன்
வேறுத் தருகிறார்கள் எப்படியும் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று பகல்கனவு வேறு.
இது போதாதா உங்களை துரதிர்ஷ்ட தேவதை மாறு கை மாறு கால் வாங்க.
கெடு முடிந்ததும் வங்கிகள் உங்கள் கழுத்தில் துண்டைப் போட்டு நெருக்குவார்கள்
கடனைக் கட்டசொல்லி, அந்த சமயத்தில் வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை!. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைக்கு இதுதான்
உதாரணம்.
அனைவர்க்கும் பொறியியல் படிப்பு போய் சேரவேண்டும் என்ற தவறான கல்வி கொள்கையால்
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பொறியியல் படிபிற்க்கான தரம் பாதாளத்திற்குள்
சென்றதுதான் மிச்சம்.
மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரி தான் மற்றும் தனது பிள்ளைகளின் கல்வியில்
நமது திறமை என்ன? சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். நான்கு வருடம் கழித்து
நான்கு லட்ச ரூபாய்க்கு கடனாளியாகி நிற்ப்பதை தவிர்க்கலாம்.
பகுதி 2 க்கு கிளிக் செய்யுங்கள்.
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
No comments:
Post a Comment