Showing posts with label CareerGuidance. Show all posts
Showing posts with label CareerGuidance. Show all posts

Thursday, 14 May 2015

என்ன படிக்கலாம் : பட்டையைக் கிளப்பும் பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பு


(Image Credit)

தற்பொழுது தொலைகாட்சியில் படிக்கும்போதே மாதம் 1௦௦௦௦ ரூபாய் சம்பளம், படித்த முடித்தபின்பு மாதம் 3௦௦௦௦ ரூபாய் சம்பளம் என்று போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சரி இந்த முறை பட்டயக் கணக்காளர் படிப்பைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் BCom(CA) படிப்பில்  சேரலாம் அல்லது Chartered Accountant படிபிற்க்கான பிரத்யோகமாக இந்தியாவில் பல கல்வி நிறுவங்கள் இருக்கின்றன அங்கு சேர்ந்தும் படிக்கலாம்.

இந்த படிப்பில் சேர்ந்து படிக்க பெரிதாக செலவு பிடிக்காது அதேசமயம் சில முன்னணி கல்வி நிறுவனங்களில் சற்று கல்வி செலவு பிடிக்கும் சமாளித்துவிடலாம்.

இது ஒரு ப்ரோபெசனல் டிகிரி மேலும் நீங்கள் MBA, CFA போன்ற மேல்நிலைப் படிப்பாகத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேலும் நீங்கள் படிக்கும்போது Articleship கட்டாயமாக படத்திட்டதிலேயே இருக்கிறது. இதனால் உங்களுக்கு சிறிய பனி அனுபவமும் கிடைக்கும்.

பொதுவாகவே இந்த படிப்பை முடித்தவர்கள் தாங்களாகவே ஒரு தொழில் முனைவோராக இருப்பார்கள், மேலும் Tax Adviser ஆகவும் செயல்படுவார்கள். இந்த துறையானது சற்று அழுத்தம் குறைவுதான் அதனால் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தலாம்.

தற்பொழுது எல்லா தொழில் நிறுவனங்களிலும் நிச்சயம் பட்டய கணக்காளர் தேவை அதனால் வேலைவாய்ப்பு பிரகாசம். நீங்கள் சற்று திறைமைசாலியாக இருந்தால் நிறுவனங்கள் உங்களிடம் போட்டிப் போட்டுகொண்டு வருவார்கள்.

ஆரம்பத்தில் தனி அலுவலகம் அமைக்கவேண்டிய அவசியம் இல்லை நீங்கள் வீட்டில் இருந்த படியே உங்கள் வேலையைப் பார்க்கலாம். நீங்கள் பெண்ணாக இருந்தால் இன்னும் உங்களுக்கு வசதியாய் இருக்கும். ஆணாக இருந்தால் ஊர் சுற்றிக்கொண்டே உங்கள் வேலையைப் பார்க்கலாம்.

இந்திய பட்டய கணக்காளர் (Institute of CA India) படிப்பை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அங்கீகாரம் கொடுக்கிறது அதனால் நீங்கள் இது போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கூட பனி செய்யலாம்.

இந்தியாவில் மட்டுமே வரும் 3 முதல் 5 வருடங்களில் மிகப்பெரிய அளவில் பட்டய கணக்காளர் தேவைபடுகிறார்கள். பிறகென்ன பொறியியல் என்று வருடக்கணக்கில் படித்து லட்சக்கணக்கில் செலவு செய்து வேலையில்லாமல் சுற்றுவதைவிட மாணவர்கள் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.    

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

Thursday, 7 May 2015

கை நிறைய சம்பளம் தரும் பாரா மெடிக்கல் துறை படிப்புகள்


(Courtesy airsonschool)

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துவிட்டன சிலருக்கு நினைத்ததுபோல் மதிப்பெண் வந்திருக்கும் வேறு சிலருக்கு நினைத்ததைவிட குறைவான மதிப்பெண் வந்திருக்கலாம். மதிப்பெண் குறைந்ததை நினைத்து கவலைபடாமல் அடுத்து என்ன செய்யலாம் என்று விரைவாக சிந்தித்து காரியத்தில் இறங்குங்கள்.
எலோருமே டாக்டருக்கு படிக்க வைக்கவேண்டும் அல்லது படிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் நிறைய பேருக்கு சாத்தியமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மருத்துவம் சார்ந்த படிப்புகள் ஏராளமாக உள்ளது. முக்கியமாக படித்த உடனேயே நமது நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலும் வேலையும், சற்று ஏறக்குறைய மருத்துவர்களுக்கு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்கும் என்பதுதான் ஆச்சர்யம் கலந்த உண்மை.
இதோ இந்த படிப்புகள்தான் தற்பொழுதுள்ள சூழலில் படித்தவுடனே நல்ல சம்பளம் தரும் படிப்பாக இருக்கின்றன.
1.Advanced Oncology Certified Nurse (AOCN)
2.Advanced Oncology Certified Nurse Practitioner (AOCNP)
3.Certified Breast Care Nurse (CBCN)
4.Oncology Certified Nurse (OCN)
5.Certified Pediatric Oncology Nurse (CPON)
6.BPT - Bachelor of Physio / Physical Therapy
7.Prosthetic and Orthotic Engineering
8.BSc ( Audiology and Speech Therapy )
9.BSc ( Ophthalmic Technology )
10.Bachelor ( Mental Rehabilitation ) - BMR
11.BSc ( Radiography )
12.BSc ( Radio Therapy )
13.BSc ( Nuclear Medicine )
14.BSc ( Respiratory Therapy Technology )
15.BSc ( Medical Technology X-Ray )
16.BSc ( Medical Secretarial Service )
17.BSc ( Operation Theatres )
18.BSc ( Medical Laboratory Technology )
19.BSc ( Allied Health Services )
20.BSc ( Bio - Medical Technique )
21.Bachelor of Speech, Language, & Hearing (BSLH)
22.Bachelor of Naturopathy & Yogic Science
23.Dental Hygienist
24.Dental Mechanics
25.Diploma In Community Health - DCH
26.Diploma In Hospital Aids
27.Certified Radiological Assistant - CRA
28.Radiation Therapy Technician
29.PG Diploma in Cardiac Pulmonary Perfusion
30.PG Diploma in Cardio Vascular Technique
31.PG Diploma in Medical Laboratory Tech
32.PG Diploma in Neuro Tech
33.PG Diploma in Radiography & Imaging Tech
34.Diploma in Anaesthesia Tech
35.Diploma in Transfusion Medical Tech
36.Diploma in Vascular Surgery Tech
37.Diploma in Dialysis Tech
38.Diploma in ECG Tech
39.Medical Records Tech
40.Medical Transcript Writing
41.Advance Diploma In Technical & Analytical Chemistry
42.Certificate Course In Laboratory Technique
43.Certificate Course In Sanitary Inspector Training
44.Certificate Course In Radiography
45.Certificate Course In X-Ray Technician
46.Certificate Course In Dark Room Assistant
47.Certificate Course In Optician & Refractionist
48.Certificate Course In Ortho-Optists
49.Diploma In Ophthalmic Assistant
50.Certificate Course In Health Works
51.Diploma In Clinical Neuro Technology - DCNT
52.PG Diploma In Bio-Medical Instrumentation
53.PG Diploma in Hospital Management
நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

Saturday, 2 May 2015

ஆங்கிலம் எனும் மந்திரம்!

ஒரு நிமிடம், ஆங்கிலம் ஒரு மந்திரம் அல்ல ஆனால் அப்படி தெரிகின்றது அவ்வளவுதான். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் ஆங்கிலம் நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும் இல்லையேல் மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வெற்றி பெறமுடியாது என்பது நிதர்சனம்.

தமிழ்தான் என் பேச்சு!
தமிழ்தான் என் மூச்சு!
தமிழ்தான் என் வாட்ச்சு!

இந்த வசனத்தை செந்தில் அருணாச்சலம் படத்தில் சொல்லும்போது எல்லோரும் சிரித்தோம். இன்று நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் நிலைமையும் சிரிப்பாகத்தான் இருக்கிறது. தமிழ்மொழியில் படித்தால் வேலை கிடைப்பது இல்லை, அல்லது வேலையில் முன்னுரிமை மறுக்கப்படுகிறது என ஏகப்பட்ட தடங்கல் இருக்கிறது. ஆங்கிலம்மும் முக்கியம்தான் அதேவேளையில் நமது தாய் தமிழை மறந்துவிடக்கூடாது.

எங்கும் ஆங்கில வழிக்கல்வி...

பனிரெண்டாம் வகுப்பு முடிந்து பட்டப்படிப்பு என்று நீங்கள் சென்றால் அனைத்து படைப்பிரிவுகளும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்படும், ஆங்கிலத்தில்தான் தேர்வும் எழுத வேண்டும், அனைத்து போட்டித்தேர்வுகளும் ஆங்கிலத்தில்தான் நடத்தப்படும். இவ்வளவு ஏன் தற்போது தமிழக அரசே பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை கொண்டுவந்துவிட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

ஏதாவது ஒரு உலக மொழி தேவை...

நமது தாய்மொழியுடன் ஒரு உலக மொழியை கற்றுக்கொண்டால் நமக்குத்தான் நல்லது. வியாபார நிமிர்த்தமாகவோ அல்லது படிக்கவோ அல்லது வேலை செய்ய வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஆங்கிலம் போன்ற ஒரு உலக மொழி நமக்கு உதவிகரமாகவும் இருக்கும். மேலும் ரஷ்ய மொழி, சீன மொழி, பிரெஞ்சு மொழியை விட ஆங்கிலத்தை விரைவாக கற்றுக்கொண்டு புலமை பெற்றுவிடலாம்.

தொலைக்காட்சியின் உதவி

தினமும் ஒரு மணி நேரமாவது ஆங்கிலத்தில் வரும் டிஷ்கவேரி, நேஷனல் ஜியோகிராஃபிக் தொலைக்காட்சியை பாருங்கள். இதனால் நீங்கள் புதிய விஷயங்களையும் தெரிந்துகொள்வீர்கள் அத்துடன் ஆங்கில வார்த்தைகளை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் எப்படி வார்த்தை உச்சரிப்பு எப்படி செய்யவேண்டும் என்றும் தெரிந்துகொள்ளலாம். மேலும் தினமும் ஒரு அரை மணி நேரமாவது ஆங்கில செய்தி தொலைக்காட்சியைப் பாருங்கள். பெரும்பாலும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எளிதான வார்த்தையில்தான் செய்திகளை வாசிப்பார்கள். இதுவும் நமக்கு ஆங்கில மொழி கற்க உறுதுணையாகவும் இருக்கும்.

தொடர்ந்து பேசுங்கள்


வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தால் அப்படியே இருக்கவேண்டியதுதான். ஆங்கிலம் மட்டும் அல்ல எந்த மொழியாக இருந்தாலும் வாய்விட்டு பேசினால்தான் அந்த மொழியில் புலமை பெறமுடியும். வாழ்த்துக்கள்.

நன்றி 
G.ராஜேஸ் ராவ் MCA.

Thursday, 30 April 2015

என்ன படிக்கலாம் : பொறியியல் படிக்க விருப்பமா ஒரு நிமிடம்…! பகுதி 2

பகுதி 2

உங்களுக்குகொன்றுத் தெரியுமா? என்பது சதவீதம் மாணவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஒரு BE இருக்கவேண்டும் என்று மாணவர்கள் இருக்கிறார்கள் இவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் பணம் படைத்தவர்கள்தான்.

இவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தில் நன்கொடை கொடுத்து தரமான கல்லூரியில் இடம் வாங்கி விடுகிறார்கள். கல்லூரியும் பணம் வருகிறதே என்று பணத்தை பெற்றுக்கொண்டு இடத்தை தருகிறார்கள்.

இதனால் உண்மையிலேயே திறமை இருந்தும் தரமான கல்லூரியில் இடம் கிடைக்காமல் ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்து தரமான படிப்பு, ஆய்வக வசதிகள், தரமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் வாழ்கையே திசை மாறிப்போய் விடுகிறது. இதற்கு அரசாங்கமும் முக்கிய காரணியாக இருக்கிறது.

மேலும் பத்து சதவீதம் மாணவர்கள் இந்த சமுதாயத்தின் வற்புறுத்தல் காரணமாகவே பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். வெறும் பத்து சதவீத மாணவர்களே உண்மையான திறமையுடன் உண்மையாகவே தான் பொறியியல் படிப்பில் சேரவேண்டும் என்றத் தெளிவோடு சேர்ந்து படித்து முடிப்பதற்குல்லோ அல்லது படித்து முடித்து ஒரு வருடதிற்குல்லோ சரியான வேலையைப் பெற்று தங்கள் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். மற்றவர்கள் வெறும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டு வாழ்கையில் ஒரு தெளிவு இல்லாமல் போகிறார்கள்.

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

என்ன படிக்கலாம் : பொறியியல் படிக்க விருப்பமா ஒரு நிமிடம்...!

பகுதி 1

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மாணவர்கள் தேர்வு செய்யும் படிப்பு பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், பெரியம்மாவின் பையன் சொன்னான், ஊரில் ஒரு பெரிய மனிதர் சொன்னார், நண்பன் சொன்னான் என்றுதான் நாம் பெரும்பாலும் பொறியியல் படிப்பில் சேருகிறோம்.

இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள் அவன்லாம் பொறியியல் படிக்கிறான் நான் படிக்கக்கூடதா?, அல்லது என் பிள்ளை படிக்கக்கூடதா? என்ற வீராப்பில் சேர்ந்து கடைசியில் சரியாகப் படிக்க முடியாமல் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு அல்லது படித்து சரியான வேலை கிடைக்காமல் “ தவறாக இந்த படிப்பைத் தேர்ந்தேடுத்துவிட்டோமோ “ என்று விழிபிதுங்கி நிற்கும் பேர்வழிகள்தான் ஏராளம்.

போதாக்குறைக்கு வங்கியில் கடன் வேறு மூன்று முதல் நான்கு லட்சம் வரை கடன் வேறுத் தருகிறார்கள் எப்படியும் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று பகல்கனவு வேறு. இது போதாதா உங்களை துரதிர்ஷ்ட தேவதை மாறு கை மாறு கால் வாங்க.

கெடு முடிந்ததும் வங்கிகள் உங்கள் கழுத்தில் துண்டைப் போட்டு நெருக்குவார்கள் கடனைக் கட்டசொல்லி, அந்த சமயத்தில் வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை!. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைக்கு இதுதான் உதாரணம்.

அனைவர்க்கும் பொறியியல் படிப்பு போய் சேரவேண்டும் என்ற தவறான கல்வி கொள்கையால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பொறியியல் படிபிற்க்கான தரம் பாதாளத்திற்குள் சென்றதுதான் மிச்சம்.

மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரி தான் மற்றும் தனது பிள்ளைகளின் கல்வியில் நமது திறமை என்ன? சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். நான்கு வருடம் கழித்து நான்கு லட்ச ரூபாய்க்கு கடனாளியாகி நிற்ப்பதை தவிர்க்கலாம்.

பகுதி 2 க்கு கிளிக் செய்யுங்கள்.

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA. 

Monday, 27 April 2015

என்ன படிக்கலாம் என்ன வேலை Computer Science : Database Admin

டேட்டாபேஸ் அட்மின் வேலையைப் பொறுத்தவரையில் நிருவதிற்கு தகுந்தாற்போல் மாறுபடும். இந்த படிப்பிற்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போதும். அத்துடன் Oracle Database, SQL Database, MySQL Database போன்றவற்றில் புலமை பெற்றிருக்கும் நபர்களுக்கு இந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும்.

முடிந்தால் சான்றிதழ் படிப்பும் முடித்திருந்தால் முன்னுரிமை கிடைக்கும். சம்பளமும் ஓரளவுக்கு இருக்கும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்.
இதுவே மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கும் மென்பொருளில் பயன்படுத்தும் டேட்டாபேஸ் அட்மின் என்றால் சம்பளம் அதிகமாகவே எதிர் பாக்கலாம். 
நல்ல பனி சூழ்நிலையும் அமையும் இல்லையென்றால் சற்று சிரமமாகத்தான் இருக்கும். இந்த வேலையை நம்பி உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வது நல்லதல்ல!

இந்த பதிவுடன் கம்ப்யூட்டர் சைன்ஸ் துறை முடிந்தது.

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

என்ன படிக்கலாம் என்ன வேலை Computer Science : TechSupport

இந்த டெக் சப்போர்ட் வேலைக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போதும் இன்னும் BSc Comp Sci அல்லது BCA என்றால் நல்லது. இந்த துறை ITES வகையைச்சார்ந்த துறை அதாவது மறைமுக ஐ.டி துறை.

சென்னையைப் பொறுத்த வரையில் இந்த வேலைக்கு மேற்கண்ட படிப்பு படித்தவர்களை தேர்வு செய்கிறார்கள் ஆனால் பெங்களுருவில் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்து ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தால் போதும் உங்களுக்கு வேலை நிச்சயம்.

ஆனால் இந்த வேலைக்கு கணினி படிப்பு படித்துத்தான் போகவேண்டும் என்ற நிலை இல்லை. அதற்கேற்றார்போல் இந்த துறையில் வேலையும் கொட்டி கிடக்கிறது. ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் இந்த துறையையில்தான் உங்கள் எதிர்காலம் என்றால் யோசித்து முடிவு செய்யுங்கள். ஏனென்றால் சாப்ட்வேர் வேலை கிடைக்கும் வரை சிலர் இந்த வேலைக்கு செல்வர்கள். 

வேலைக்கு போகாமல் இருப்பதற்கு பதில் இந்த வேலைக்காவது போகலாம் என்று போவர்கள். இதை நம்பி உங்கள் எதிர்காலத்தை நிர்மாணிக்க வேண்டாம்.

இந்த பதிவின் தொடர்ச்சி விரைவில்...

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

Saturday, 25 April 2015

என்ன படித்தால் என்ன வேலை Computer Science : Hardware Networking

Networking Engineer என்றவுடன் அனேகன் படத்தில் தனுஷ் வேலை செய்வது போல் இலகுவான வேலையாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு நேர்மாறாகத்தான் இருக்கும்.

இந்த வேலைக்கு நீங்கள் CCNA, A+, N+, Microsoft Certification, போன்ற நிறைய பட்டய படிப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த Certification செய்யலாம், Cisco படிப்பென்றால் நான்கு வருடம் செல்லுபடியாகும். பிறகு மீண்டும் தேர்வெழுதி பெறவேண்டும்.

இந்த துறையை தேர்வு செய்தால் சாதரணமாக கணினியில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள் முதல் ஒட்டுமொத்தமாக உள்ள Network ஐ கட்டி காப்பாற்ற வேண்டும். சிறு தடங்கல், பிரச்சினைகள் என்றாலும் நிங்கள்தான் பொறுப்பு.

BCA, BSc Comp Sci படித்துவிட்டு இதில் ஏதேனும் ஒரு சான்றிதழ் படித்து வேலை தேடலாம். வேலை பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும் வேலை நேரமும் அதிகம்தான். அதற்கேற்ப சம்பளமும் அதிகமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம் சம்பளம் மிகவும் குறைவுதான். பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். மேலும் சென்னையில் சம்பள விகிதம் சற்று மோசம்தான். பெங்களுருவில் சற்று அதிகம் ஆனால் அங்கே செலவு அதிகம்.

என் உடன் MCA படித்த நண்பர் ஒருவர் இந்த துறையில்தான் இருக்கிறார், CTS, TCS போன்ற நிறுவனங்களில் பனிபுரிந்துவிட்டு தற்போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் இருக்கிறார். தற்போது விவசாயம் பார்க்க போகிறேன் என்று மூன்று மாதமாக கூறிக்கொண்டு இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் “Networking Engineer தான் என் கனவு” என்று சென்னைக்கு பேருந்து ஏறினார், இப்போதோ எப்போது உடுமலைபேட்டைக்கு பேருந்து ஏறலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

சரி இதுதான் நிதர்சனம், பொதுவாகவே நம்மை கணினி நிறுவங்களில் பிழிந்து எடுத்து விடுவார்கள் அதிலும் இந்த துறையில் அவர்களே காயப்போட்டு விடுவார்கள் உங்களுக்கு கவலையே வேண்டாம்.

இந்த பதிவின் தொடர்ச்சி விரைவில்...

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA. 

என்ன படித்தால் என்ன வேலை Computer Science: Software Testing

கணினி துறையில் மற்றுமொரு அங்கம்தான் இந்த Software Testing. இந்த துறையில் சம்பளமானது Software Engineer ஐ விட சற்று குறைவாக இருக்கும். ஒரு வேலை உங்களுக்கு C, C++, Java, C#, PHP போன்ற மொழிகள் உங்களுக்குத் தெரியும் ஆனால் நிரல்களை(Program) எழுத முடியாது என்றால் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் ஆனால் நிச்சயமாக உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கணினி மொழியில் எல்லா அம்சமும் தெரிந்திருக்கவேண்டும்.

Software Testing Team இல்லாத கணினி மென்பொருள் நிறுவனங்களே இருக்க முடியாது. அவர்கள் தயாரிக்கும் எல்லா மென்பொருளும் சோதனை செய்யவேண்டும் அதற்கு ஒரு குழு நிச்சியமாகத் தேவை. நமது கணினி மற்றும் செல்பேசிகளில் பயன்படுத்தும் செயலிகளும்(Applications) சோதனைக்குழுக்களால் (Testing Team) நூற்றுக்கணக்கான முறை சோதனை செய்யப்படும்.

பிறகுதான் நாம் பயன் படுத்தும் Beta வெர்சன் வெளியிடப்படும். பயன்படுத்துபவர்கள் தரும் கருத்துக்கள் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை மாற்றி அமைத்து முழு பதிப்பாக வெளியிடப்படுகிறது. இதற்கு நிறைய மனிதவளம் தேவைப்படும்.

இந்த துறையிலும் சில முறைகள் உள்ளது. Manual Testing, Automation Testing, Selenium என்று இன்னும் பல வகையான முறைகள் உள்ளது. இதில் உங்கள் விருப்பம் என்ன என்று பார்த்து தேர்வு செய்து கற்றுக்கொண்டு வேலை தேட முயற்சிக்கலாம். முடிந்தவரையில் படிக்கும்போதே ஒரு நல்ல Computer Center ல் சேர்ந்து படித்தால் உங்கள் கல்லுரி படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேர்ந்துவிட சரியாக இருக்கும் இல்லையென்றால் நேரம் வீணாகும் விவேகம் தேவை. கணினித்துறையைப் பொறுத்த வரையில் சென்ற ஆண்டு படித்த மாணவர்களுக்கு இந்த வேலை கிடைப்பது சற்று சிரமம். 

எனவே எத்தனை விரைவில் வேலை தேடகொள்ள முடியுமோ ஒரு வேலையில் அமர்ந்துவிட வேண்டும். ஒரு வருடம் மேல் ஆகிவிட்டால் கணினி நிறுவனங்கள் உங்களை பரிசிலினை செய்ய தயாராக இல்லை. எச்சரிக்கை!.

இந்த பதிவின் தொடர்ச்சி விரைவில்...

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

என்ன படித்தால் என்ன வேலை : Computer Science


  
பனிரெண்டாம் வகுப்பு முடிந்து பொறியியல் சேரும் மாணவர்கள் நான்கில் மூன்று சதவிதம் பேர் இந்த கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் வேலைவாய்ப்பு உடனடியாகவும் கிடைக்கிறது. ஆனால் யாருக்கு உடனே கிடைக்கும் என்பதில்தான் சங்கதியே இருக்கிறது.

BSc Computer Science, BCA, MCA, BE.IT, BE.Computer Science போன்ற படிப்புகளை படித்தாலே போதும் கணினி நிறுவனங்கள் நம்மை வேலைக்கு சேர்த்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய்யை சம்பளமாக கொட்டுவார்கள் என்று பகல் கனவு காணாதீர்கள், அது பெரும்பாலும் காணல்நீர்தான்.

மேற்கண்ட படிப்புகளை நீங்கள் எந்த கல்லூரியில் படிக்கிறீர்கள்? எப்படி படித்தீர்கள்? என்பது மிகவும் முக்கியம். நிதர்சன உலகிற்க்கு வந்து உங்கள் கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் அருகிலேயே 85% மேல் மதிப்பெண் எடுத்தவர்கூட சரியான வேலை கிடைக்காமல் அலைந்துகொண்டு இருப்பார். அதேசமயம் 5 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர் கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்து ஒய்யாரமாக சுற்றிக்கொண்டு இருப்பார்.

இந்த முரண்பாடுகள் எப்படி உருவாகிறது? வெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மாங்கு மாங்கென்று படித்து மதிப்பெண் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. நமக்கு உண்மையில் தரமாகவும் விரைவாகவும் நிரல்களை(Programs) எழுதத் தெரியவேண்டும். இல்லையென்றால் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் வீட்டிலேயே படுத்து உறங்கலாம். வேலை கணினி நிறுவனத்தில் கிடைக்க வாய்ப்பே இல்லை, எச்சரிக்கை தேவை. நிரல்களை எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டு முயற்சித்தால் வேலை கிடைக்கும் இல்லையேல் சிக்கல்தான். உங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும்.

நீங்கள் படிக்கும்போதே C, C++, Java, C#, PHP, Pythan, Android போன்றவற்றை தேர்ந்தெடுத்து முழு ஈடுபாடு செலுத்தி கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தகுந்தற்போல வேலை கிடைக்கும் நிறுவனங்களை தொடர்புகொண்டு முயற்சி செய்யலாம். மிக விரைவில் வேலை கிடைக்க வாய்புகள் இருக்கிறது. முக்கியமாக படிக்கும்போதே இதை செய்யவேண்டும் இல்லையேல் படிப்பு முடிந்து மீண்டும் இதைப்பற்றி படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் பணம் ஒதுக்க வேண்டும்.

இன்று இணையம் எல்லோர் கைகளிளும் தவழ்கிறது ஆனால் உருப்படியாக பயன்படுத்துகிறோமா என்றால் நிச்சியமாக இல்லை. இணையம் வழியாகவே நீங்கள் கற்றுகொள்ளலாம். வறிக்கு வறி சொல்லிக்கொடுக்கும் இணையதளங்கள் எராளமாக இருக்கிறது. கணினித்துறையில் கணினியில் திறைமைசாலி, புத்திசாலிகளுக்கு மட்டும்தான் வேலை படிப்பாளிகளுக்கு கணினி நிறுவனத்தில் வேலையில்லை மனதில் வைத்துக்கொண்டால் நீங்கள் கணினித்துறையில் உங்கள் வெற்றிக்கொடி பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த பதிவின் தொடர்ச்சிகள்...

ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங் (Hardware Networking)
சாப்ட்வேர் டெஸ்டிங் (Software Testing)
http://onlinearasan.blogspot.com/2015/04/computer-science-software-testing.html
சாப்ட்வேர் டெவலப்பர் (Software Developer)

டெக் சபோர்ட் (Tech Support)
டேட்டாபேஸ் அட்மின் (Database Admin)

இந்த பதிவுகளை +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றும் பெற்றோருக்கு பகிருங்கள்.

நன்றி

G.ராஜேஸ் ராவ் MCA.

என்ன படித்தால் என்ன வேலை Computer Science : Software Developer/Engineer

கணினி நிறுவனங்களில் நிறைய துறைகள் இருக்கின்றன அதில் ஒரு துறைதான் மென்பொருள் பொறியியலாளர் (Software Developer/Engineer). மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த துறைதான் குறி வைக்கிறார்கள். நீங்கள் நிரல்கள்(Programs) எழுதுவதில் புலியாக இருக்க முடியவில்லை என்றாலும் ஒரு புணையாகவது இருப்பது நலம் இல்லையேல் இந்த துறையை மறந்துவிடுங்கள்.

சென்ற பதிவில் சொன்னதுபோல் உங்களுக்கு C, C++, Java, Php, C#, Pythan போன்றவை நிச்சயமாக தெரிந்திருக்கவேண்டும். இதுதான் நிரல்களை எழுதுவதற்க்கு அடிப்படை. இதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பட்சத்தில் கணினி நிறுவனங்கள் உங்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும்.

ஆனால் இதில்தான் நிறுவனத்தில் வேலை செய்வீர்கள் என்றால் நிச்சயமாக சொல்லமுடியாது. பெரிய MNC நிறுவனங்கள் தாங்களே தங்களுகென்று தனித்துவமான Framework/ Editor வைத்திருப்பார்கள். அதில் உங்களை பயிற்சி கொடுக்க வைத்து பின் அவர்கள் வேலை Project ல் உங்களை அமர்த்துவார்கள்.

இந்த வேளையிலும் நிறைய படிநிலைகள் இருக்கிறது. Project Trainee, Associate Software Engineer, Senior Software Engineer, Team Leader, Team Manager, Manager, Project Architect என்று நிறைய படிநிலைகள் உள்ளது. இதில் பெயர்களும் பதவிகளும் நிறுவனங்களில் மாறுபடலாம்.   

பெரிய நிருவனகளில் வேலை கிடைத்தால் உங்களுக்கு வேலையும் குறைவு சூட்சமங்களை கற்றுகொள்ளும் வாய்ப்பும் குறைவு. ஒவ்வொரு குறிப்பிட்ட வேலையை செய்யவும் குறிப்பிட்ட நபர் இருப்பார் பிறகு எப்படி தெரிந்துகொள்வீர்கள். அதேவேளையில் சிறிய நிறுவங்களில் வேலை கிடைத்தால் வேலையும் அதிகமாக இருக்கும் நிறைய விஷயங்களையும் கற்றுகொள்ளலாம். அதனால் முதலில் வேலைக்கு போகும்போது சிறிய நிறுவனங்களாக பார்த்து சேரவேண்டும்.

இந்த துறையில் சில ஆண்டுகள்தான் உங்களால் பணியாற்ற முடியும் ஒன்று நீங்களே வெளியே வந்துவிடுவீர்கள் அல்லது நிறுவனமே உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். விவேகத்துடன் செயல்படுங்கள் வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.

இதன் தொடர்ச்சி விரைவில்...

நன்றி,


G.ராஜேஸ் ராவ் MCA.