(Image Credit)
தற்பொழுது தொலைகாட்சியில் படிக்கும்போதே மாதம் 1௦௦௦௦ ரூபாய்
சம்பளம், படித்த முடித்தபின்பு மாதம் 3௦௦௦௦ ரூபாய் சம்பளம் என்று போகாத ஊருக்கு
வழி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற
வேண்டாம். சரி இந்த முறை பட்டயக் கணக்காளர் படிப்பைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் BCom(CA)
படிப்பில் சேரலாம் அல்லது Chartered
Accountant படிபிற்க்கான பிரத்யோகமாக இந்தியாவில் பல கல்வி நிறுவங்கள் இருக்கின்றன
அங்கு சேர்ந்தும் படிக்கலாம்.
இந்த படிப்பில் சேர்ந்து படிக்க பெரிதாக செலவு பிடிக்காது
அதேசமயம் சில முன்னணி கல்வி நிறுவனங்களில் சற்று கல்வி செலவு பிடிக்கும்
சமாளித்துவிடலாம்.
இது ஒரு ப்ரோபெசனல் டிகிரி மேலும் நீங்கள் MBA, CFA போன்ற
மேல்நிலைப் படிப்பாகத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேலும் நீங்கள் படிக்கும்போது
Articleship கட்டாயமாக படத்திட்டதிலேயே இருக்கிறது. இதனால் உங்களுக்கு சிறிய பனி
அனுபவமும் கிடைக்கும்.
பொதுவாகவே இந்த படிப்பை முடித்தவர்கள் தாங்களாகவே ஒரு
தொழில் முனைவோராக இருப்பார்கள், மேலும் Tax Adviser ஆகவும் செயல்படுவார்கள். இந்த
துறையானது சற்று அழுத்தம் குறைவுதான் அதனால் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தலாம்.
தற்பொழுது எல்லா தொழில் நிறுவனங்களிலும் நிச்சயம் பட்டய
கணக்காளர் தேவை அதனால் வேலைவாய்ப்பு பிரகாசம். நீங்கள் சற்று திறைமைசாலியாக
இருந்தால் நிறுவனங்கள் உங்களிடம் போட்டிப் போட்டுகொண்டு வருவார்கள்.
ஆரம்பத்தில் தனி அலுவலகம் அமைக்கவேண்டிய அவசியம் இல்லை
நீங்கள் வீட்டில் இருந்த படியே உங்கள் வேலையைப் பார்க்கலாம். நீங்கள் பெண்ணாக
இருந்தால் இன்னும் உங்களுக்கு வசதியாய் இருக்கும். ஆணாக இருந்தால் ஊர்
சுற்றிக்கொண்டே உங்கள் வேலையைப் பார்க்கலாம்.
இந்திய பட்டய கணக்காளர் (Institute of CA India) படிப்பை
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அங்கீகாரம் கொடுக்கிறது அதனால்
நீங்கள் இது போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கூட பனி செய்யலாம்.
இந்தியாவில் மட்டுமே வரும் 3 முதல் 5 வருடங்களில்
மிகப்பெரிய அளவில் பட்டய கணக்காளர் தேவைபடுகிறார்கள். பிறகென்ன பொறியியல் என்று
வருடக்கணக்கில் படித்து லட்சக்கணக்கில் செலவு செய்து வேலையில்லாமல் சுற்றுவதைவிட
மாணவர்கள் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
No comments:
Post a Comment