Monday, 4 May 2015

“அட்டகத்தி” இயக்குனர் இயக்கத்தில் “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்த்!


சில நாட்களாகவே சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தைப்பற்றி இணையம் மற்றும் செய்தித்தாள்களில் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இன்று அந்த செய்திகளை எல்லாம் வதந்திகள்தான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு நம்பகமான செய்தி வந்திருக்கிறது.


பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஒரு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை தனது “ட்விட்டர்” பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்தின் அடுத்த படத்தை “அட்டகத்தி” மற்றும் “மெட்ராஸ்” படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்க உள்ளார் மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைபுலி S தாணு தயாரிக்கிறார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஓரிரு நாட்களில் ரஜினி தரப்பிலோ, தாணு தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக பட அறிவிப்பு  செய்தி வெளியிடப்படுகிறது. ரஜினியின் மற்றொரு பரிமாணத்தை காட்டிய “தளபதி” படத்திற்குப்பிறகு அப்படி ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது.  

No comments:

Post a Comment