ஒரு நிமிடம், ஆங்கிலம் ஒரு மந்திரம் அல்ல ஆனால் அப்படி தெரிகின்றது
அவ்வளவுதான். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் ஆங்கிலம் நிச்சயம்
தெரிந்திருக்கவேண்டும் இல்லையேல் மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வெற்றி பெறமுடியாது
என்பது நிதர்சனம்.
தமிழ்தான் என் பேச்சு!
தமிழ்தான் என் மூச்சு!
தமிழ்தான் என் வாட்ச்சு!
இந்த வசனத்தை செந்தில் அருணாச்சலம் படத்தில் சொல்லும்போது எல்லோரும்
சிரித்தோம். இன்று நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் நிலைமையும் சிரிப்பாகத்தான்
இருக்கிறது. தமிழ்மொழியில் படித்தால் வேலை கிடைப்பது இல்லை, அல்லது வேலையில்
முன்னுரிமை மறுக்கப்படுகிறது என ஏகப்பட்ட தடங்கல் இருக்கிறது. ஆங்கிலம்மும் முக்கியம்தான் அதேவேளையில் நமது தாய் தமிழை
மறந்துவிடக்கூடாது.
எங்கும் ஆங்கில வழிக்கல்வி...
பனிரெண்டாம் வகுப்பு முடிந்து பட்டப்படிப்பு என்று நீங்கள் சென்றால் அனைத்து
படைப்பிரிவுகளும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்படும், ஆங்கிலத்தில்தான்
தேர்வும் எழுத வேண்டும், அனைத்து போட்டித்தேர்வுகளும் ஆங்கிலத்தில்தான்
நடத்தப்படும். இவ்வளவு ஏன் தற்போது தமிழக அரசே பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை
கொண்டுவந்துவிட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஏதாவது ஒரு உலக மொழி தேவை...
நமது தாய்மொழியுடன் ஒரு உலக மொழியை கற்றுக்கொண்டால் நமக்குத்தான் நல்லது.
வியாபார நிமிர்த்தமாகவோ அல்லது படிக்கவோ அல்லது வேலை செய்ய வெளிநாடுகளுக்கு
செல்லும்போது ஆங்கிலம் போன்ற ஒரு உலக மொழி நமக்கு உதவிகரமாகவும் இருக்கும். மேலும்
ரஷ்ய மொழி, சீன மொழி, பிரெஞ்சு மொழியை விட ஆங்கிலத்தை விரைவாக கற்றுக்கொண்டு புலமை
பெற்றுவிடலாம்.
தொலைக்காட்சியின் உதவி
தினமும் ஒரு மணி நேரமாவது ஆங்கிலத்தில் வரும் டிஷ்கவேரி, நேஷனல் ஜியோகிராஃபிக்
தொலைக்காட்சியை பாருங்கள். இதனால் நீங்கள் புதிய விஷயங்களையும் தெரிந்துகொள்வீர்கள்
அத்துடன் ஆங்கில வார்த்தைகளை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் எப்படி வார்த்தை
உச்சரிப்பு எப்படி செய்யவேண்டும் என்றும் தெரிந்துகொள்ளலாம். மேலும் தினமும் ஒரு
அரை மணி நேரமாவது ஆங்கில செய்தி தொலைக்காட்சியைப் பாருங்கள். பெரும்பாலும் நாம்
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எளிதான வார்த்தையில்தான் செய்திகளை வாசிப்பார்கள். இதுவும்
நமக்கு ஆங்கில மொழி கற்க உறுதுணையாகவும் இருக்கும்.
தொடர்ந்து பேசுங்கள்
வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தால் அப்படியே இருக்கவேண்டியதுதான். ஆங்கிலம்
மட்டும் அல்ல எந்த மொழியாக இருந்தாலும் வாய்விட்டு பேசினால்தான் அந்த மொழியில்
புலமை பெறமுடியும். வாழ்த்துக்கள்.
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
No comments:
Post a Comment