இந்த டெக் சப்போர்ட் வேலைக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போதும் இன்னும் BSc
Comp Sci அல்லது BCA என்றால் நல்லது. இந்த துறை ITES வகையைச்சார்ந்த துறை அதாவது
மறைமுக ஐ.டி துறை.
சென்னையைப் பொறுத்த வரையில் இந்த வேலைக்கு மேற்கண்ட படிப்பு படித்தவர்களை
தேர்வு செய்கிறார்கள் ஆனால் பெங்களுருவில் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்து
ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தால் போதும் உங்களுக்கு வேலை நிச்சயம்.
ஆனால் இந்த வேலைக்கு கணினி படிப்பு படித்துத்தான் போகவேண்டும் என்ற நிலை
இல்லை. அதற்கேற்றார்போல் இந்த துறையில் வேலையும் கொட்டி கிடக்கிறது. ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
இந்த துறையையில்தான் உங்கள் எதிர்காலம் என்றால் யோசித்து முடிவு செய்யுங்கள்.
ஏனென்றால் சாப்ட்வேர் வேலை கிடைக்கும் வரை சிலர் இந்த வேலைக்கு செல்வர்கள்.
வேலைக்கு
போகாமல் இருப்பதற்கு பதில் இந்த வேலைக்காவது போகலாம் என்று போவர்கள். இதை நம்பி
உங்கள் எதிர்காலத்தை நிர்மாணிக்க வேண்டாம்.
இந்த பதிவின் தொடர்ச்சி விரைவில்...
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
No comments:
Post a Comment