Networking Engineer என்றவுடன் அனேகன் படத்தில் தனுஷ் வேலை செய்வது போல்
இலகுவான வேலையாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு நேர்மாறாகத்தான்
இருக்கும்.
இந்த வேலைக்கு நீங்கள் CCNA, A+, N+, Microsoft Certification, போன்ற நிறைய
பட்டய படிப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த Certification செய்யலாம், Cisco
படிப்பென்றால் நான்கு வருடம் செல்லுபடியாகும். பிறகு மீண்டும் தேர்வெழுதி
பெறவேண்டும்.
இந்த துறையை தேர்வு செய்தால் சாதரணமாக கணினியில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள்
முதல் ஒட்டுமொத்தமாக உள்ள Network ஐ கட்டி காப்பாற்ற வேண்டும். சிறு தடங்கல்,
பிரச்சினைகள் என்றாலும் நிங்கள்தான் பொறுப்பு.
BCA, BSc Comp Sci படித்துவிட்டு இதில் ஏதேனும் ஒரு சான்றிதழ் படித்து வேலை
தேடலாம். வேலை பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும் வேலை நேரமும் அதிகம்தான்.
அதற்கேற்ப சம்பளமும் அதிகமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம் சம்பளம் மிகவும்
குறைவுதான். பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். மேலும் சென்னையில் சம்பள விகிதம்
சற்று மோசம்தான். பெங்களுருவில் சற்று அதிகம் ஆனால் அங்கே செலவு அதிகம்.
என் உடன் MCA படித்த நண்பர் ஒருவர் இந்த துறையில்தான் இருக்கிறார், CTS, TCS
போன்ற நிறுவனங்களில் பனிபுரிந்துவிட்டு தற்போது சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில்
இருக்கிறார். தற்போது விவசாயம் பார்க்க போகிறேன் என்று மூன்று மாதமாக கூறிக்கொண்டு
இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் “Networking Engineer தான் என் கனவு”
என்று சென்னைக்கு பேருந்து ஏறினார், இப்போதோ எப்போது உடுமலைபேட்டைக்கு பேருந்து
ஏறலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
சரி இதுதான் நிதர்சனம், பொதுவாகவே நம்மை கணினி நிறுவங்களில் பிழிந்து எடுத்து
விடுவார்கள் அதிலும் இந்த துறையில் அவர்களே காயப்போட்டு விடுவார்கள் உங்களுக்கு
கவலையே வேண்டாம்.
இந்த பதிவின் தொடர்ச்சி விரைவில்...
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
No comments:
Post a Comment