Monday, 3 November 2014

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 - மேஷம்

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 - மேஷம்

மேஷம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் அஷ்டம சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அஷ்டம சனி தரும் தீய பலனை நினைத்து மனம் கலங்க வேண்டாம். உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி குரு உச்சம் பலம் பெற்று உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதாலும் அஷ்டமத்தில் நிற்கும் சனியை பார்ப்பதாலும் கெட்ட பலன்கள் மிகவும் குறைவாகவே நடைபெறும். புதிதாக வயிற்று வலி வரும் அது ரொம்ப நாளைக்கு நீடிக்கும், எல்லாதிலேயுமே பணம் நஷ்டம் ஆகும், எல்லாக் காரியங்களும் தோல்வியில் முடியும், நிலையில்லாத வாழ்க்கை என மனம் விரக்தியடையும் வளர்ப்பு பிராணிகளுக்கும் பாதிக்கப்படும், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் புதிது புதிதாகபலவகையான நோய்களால் பாதிப்பு ஏற்பட்டு உடம்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

நண்பர்க்ளுக்கும் கஷ்டம், அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறை தண்டனையும் ஏற்படலாம். ஜாதகப்படி மாரக தசை நடப்பவர்களுக்கு உயிருக்கு பயம் வரும், மானம் கௌரவம் கெடும், மனைவியுடன் தகராறு உண்டாகி அதனால் மன நிம்மதி குறையும் எல்லாவற்றிலும் பலவகை தடங்கல்கள் தண்டச் செலவுகள் அபராதத் தொகை செலுத்துதல் போன்ற வகைகளில் வீணாக பணம் செலவழியும், வசதியற்ற ஊருக்கு உத்தியோக மாற்றம் ஏற்பட்டு கஷ்டப்படும் நிலை உருவாகும், கண்ணில் நோய் ஏற்படும். இந்த அஷ்டம சனி காலகட்டத்தில் கூசாமல் பொய் சொல்லும் நிலை ஏற்படும், பசிக்கு சரியான சாப்பாடு கிடைக்காமல் திண்டாட வேண்டியிருக்கும். 
மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிகொண்டேயிருக்கும், யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியிருக்கும், கடுமையான உழைப்பின் மூலம் தான் வாழ்க்கையை நடத்தவேண்டியிருக்கும், விபத்துகளும் உண்டாகலாம், இந்த காலகட்டத்தில் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள் உங்கள் குழந்தைகளே உங்களை மதிக்கமாட்டர்கள்.

மனசு கலங்காதீர்கள் யாரிடமும் வீண் பேச்சு விதண்டாவாதம் செய்யாதீர்கள் கடவுள் அருளும் கடும் உழைப்பும் கஷ்டமான பலனை குறைக்கும்.

மற்ற இராசி வாசகர்கள் இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்

http://onlinearasan.blogspot.in/search/label/Sanipeyarchi%202014%20-%202017


மேஷம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

No comments:

Post a Comment