Sunday, 30 November 2014

ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்த “கை” குஷ்பூ


நடிகை குஷ்பூ சமிபத்தில்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அதற்குள் சர்ச்சையில் சிக்கிவிட்டார்.

“நடிகர் ரஜினிகாந்த் உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால் அரசியலுக்கு வரலாம். அதைவிடுத்து மக்களை தன் அரசியல் வரவை வைத்து குழப்பக்கூடாது” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் எப்போது தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி ஊடகங்கள்தான் மாற்றி மாற்றி செய்திகளை போட்டு அவரை உலுக்கிக்கொண்டிருகிறது.
நேற்றுதான் “விடுதலைபுலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு, காங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது” என்று “கருத்து” தெரிவித்தார்.


இதுமட்டும்மல்ல சில மதங்களுக்கு முன்பே “நடிகர் ரஜினிகாந்த்வுடன் இனிமேல் நடிக்கமாட்டேன், அவர் படங்களில் வரும் வாய்ப்பிலும் நடிக்க நடிக்கமாட்டேன்” என்று “கருத்து” தெரிவித்தார்.

No comments:

Post a Comment