Monday, 3 November 2014

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 தனுசு

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. இது ஏழரை சனியின் முதல் இரண்டரை வருஷ காலமாகும். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உங்கள் ராசியதிபதி குரு ரொம்ப பலமாக உச்சமாக இருந்து சனியை பார்ப்பதால் இந்த ஏழரை சனியின் தாக்கம் அவ்வளவாக பாதிக்காது நெகடிவ் எல்லாம் பாசிடிவாக மாறிவிடும். சனி கொஞ்சமாக தரப்போகும் கெட்டபலனை தெரிந்து கொண்டு கவனமாக செயல்பட்டால் சிறப்பு உண்டாகும்.

கொஞ்சம் கெட்டபலன் நடந்தாலும் குரு பார்வை இருக்கிறதால் செலவுகள் சுப செலவுகளாக மாறும் அதாவது வீடு கட்டுதல் புது வாகனம் வாங்குதல் திருமண வயது ஆகிறவர்களுக்கு திருமணம் நடைபெறுதல் போல நல்ல பலனை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்கும் கொஞ்சம் நஷ்டம் வரும் தொழிலில் கவனமாக இருங்கள், நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

அலைச்சல் செலவு காரணமாக மனசு சங்கடப்படும். தொழில் உத்தியோக வகைகளில் கொஞ்சம் பிரச்சினை வரலாம், பணம் கொடுக்கல் வாங்கல் சற்று சிரமமாக இருக்கும், மனசு குழம்பும் முடிவு எடுக்க திணறுவீர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். மனம் கலங்க வேண்டாம் எல்லாமே நல்லதாகவே நடைபெறும். 

தனுசு ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

No comments:

Post a Comment