Monday, 3 November 2014

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 விருச்சிகம்

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஏழரை சனியின் இரண்டாவது இரண்டரை வருஷ காலமாகும் ஜன்ம சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜன்மத்தில் சனி அதிகமாக தீய பலன்களையே தருவார் என்று நினைத்து பயப்படாதீர்கள்.

உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய குடும்ப ஸ்தானதிபதி குரு உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பலத்துடன் நின்று உங்கள் ராசியை பார்ப்பதால் ஒரு கஷ்டமும் வராது எல்லாமே நல்லதே நடக்கும் இருந்தாலும் சனி பகவான் ராசியில் இருக்கிறார் அல்லவா, சில விஷயங்களில் கவனமாக இருந்தால் எல்லா கெட்ட பலனின் தாக்கத்தையும் குறைத்துக் கொள்ளலாம். நோயின் காரணத்தால் தேவையில்லாமல் வீணாக செலவழிக்கவேண்டிவரும் எல்லாருமே உங்களுக்கு எதிரியாக தெரிவார்கள், சுயநலமிக்க எதிரிகளின் சூழ்ச்சியால் சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் அவதிப்பட நேரிடும் சிறை பயம் உண்டாகும்.

மானம் கௌரவம் பாதிக்கப்படும் தலை குனியும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் பழகுபவர்களின் குணத்தை அறிந்து கொண்டு உறவை தொடருங்கள். தண்ணீரில் கண்டம் உண்டு, வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம் கவனம் தேவை, தவறான உணவு பழக்கவழக்கத்தால் உடல் நிறம் மாறும் முகப்பொலிவு கெட்டு முகம் அழகு குறையும், கத்தி அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படலாம், அளவிற்கு மீறி உழைக்க வேண்டி வரும் அதனால் உடல் சோர்வடையும் சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.


சனி உழைப்பிற்கு காரகர் எனவே கடுமையாக உழைக்கும் உங்களை சனி சோதிக்க மாட்டார். 

விருச்சகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

No comments:

Post a Comment