இயக்குனர் மகிழ் துருமேனி இயக்கிய “தடையற தாக்க”
படத்தை பார்த்தவர்கள் நிச்சியமாக இவரின் அடுத்த படம் எப்போது வரும் என்று
நினைத்திருப்பார்கள் ஆனால் எத்தனை பேர் பார்த்தார்கள் என்றுத் தெரியவில்லை. சரி
அது அவர்கள் நஷ்டம்.
மீகாமன் படமானது அதிரடிப்படம்தான் ஆனால்
முழுமையான அதிரடிப்படமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த படம் கொஞ்சம்
இழுத்துக்கொண்டுதான் செல்கிறது.
ஆர்யா தனது கதாப்பாத்திரம் அறிந்து
கலக்கியிருக்கிறார் அதற்கு தமனும் ஈடுகொடுத்து இசை அமைத்துள்ளார். இடைவேளையில்
வரும் சண்டைக்காட்சியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர்.
ஹன்சிகாவிற்கு பெரிதாக வேலை இல்லை இருந்தாலும்
மனதில் நிற்கிறார். மற்ற நடிகர்கள் தங்களின் பங்கு என்னவோ அதை செய்துவிட்டு
போகிறார்கள். சண்டைக்காட்சியில், கோவாவின் கடற்கறை என ஒளிப்பதிவில் மிளிர்கிறார்
சதீஷ் குமார். படத்தொகுப்பு பார்த்த ஸ்ரீகாந்த் கொஞ்சம் கவனம்
செலுத்தியிருக்கலாம்.
போதை பொருள் கடத்துதும் கும்பலை பற்றிய படம்
அதில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. படம் சற்று இறுக்கமான நிலையில்
செல்கிறது. திரைகதை தெம்பாக அதேநேரத்தில் மெதுவாக செல்கிறது. அதிரடிப்படம்
பார்க்கப்பிடித்தால் உங்களுக்கு பிடிக்கும் இந்த “மீகாமன்”.
No comments:
Post a Comment