பொங்கலுக்கு வெளிவரும் ஐ படம் குறித்த எதிர்ப்பார்ப்பு, எமி ஜாக்ஸனுக்கு ஜாக்பாட் அடிக்க வைத்திருக்கிறது. இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை இருப்பதால், எமியை முன்னணி ஹீரோக்கள் தங்கள் ஜோடியாக்க முயற்சிக்கின்றனர். ஏற்கெனவே சூர்யா-வெங்கட் பிரபு இணைந்துள்ள ‘மாஸ்' படத்திலும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.
அடுத்து தனுஷ் தனது அடுத்த படத்துக்கு எமியை ஜோடியாக்கிவிட்டார். இந்தப் படத்தை வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.
அதேபோல், ‘மான்கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன், உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்திலும் எமிஜாக்சன் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
No comments:
Post a Comment