Monday, 27 April 2015

விஜய் டிவி முகத்தில் சாணியை கரைத்து அடித்த சிவகார்த்திகேயன்!



இந்த வருடம் விஜய் டிவிக்கு ஜென்ம சனி போல சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சயில் தன் தலையில் தானே மண் அள்ளி அள்ளி போட்டுக்கொண்டது. இது போதாது என்று இந்த முறை #VijayAwards பெயரில் மேலும் கறியை முகத்தில் பூசிக்கொண்டது என்றால் மிகையாகது.

ஆரம்பமே முதலே காற்று வாங்கியது...

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் இல்லாமலே போய்க்கொண்டு இருந்தது. அதற்குகேற்றர்போல நிகழ்ச்சியும் நீண்ண்ண்ண்ண்டுகொண்டே போனது. எல்லோருக்கும் மயக்கம் வராத குறைதான்.

சிவாஜி குடும்பம் வரவில்லை...

ஆண்டுதோறும் சிவாஜி குடும்பம்தான் யாராவது முக்கியகமாக ஒருவருக்கு “செவாலியே சிவாஜி கணேசன் விருது” வழங்க வருவார்கள். இந்த ஆண்டு ஏனோ ஒருவரும் வந்தபாடில்லை.

கடுப்பில் போன இளையராஜா...

இந்த வருடம் “இசைஞானி இளையராஜா” விற்கு  “செவாலியே சிவாஜி கணேசன் விருது” வழங்க அழைத்து வந்தார்கள். ஆனால் அவரும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்பிகூடப் பார்க்காமல் போய்விட்டார். பார்வையாளர்களுக்கு என்ன நடக்கிறது தெரியவில்லை.

எரிச்சலின் உச்சம் டி.டி...

பொதுவாகவே நிறைய பேர் டி.டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் பல்லைக்கடித்துக்கொண்டுதான் பார்ப்பார்கள். இந்த முறையும் அப்படித்தான் நடந்தது, இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுமை இழந்து விழா மேடையிலேயே குத்திக்காட்டிப் பேசினார். #ஏ_விஜய்_டிவி_நிர்வாகமே_டி.டியின்_சவுண்டை_குறையுங்கள்.

சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது யாருக்கு?

சத்தியமாக விஜய் டிவி நிர்வாகதுக்கே தெரியவில்லை யாருக்கு தருவது என்று!. ஆம் யாருக்குத் தந்தால் நமது டி.ஆர்.பி ரேட்டிங் உயரும் என்று பார்த்துதான் இந்த விருதை தருவார்கள். ஆனால் சென்ற முறை #தலைவா படத்திற்கு நடிகர் விஜய்க்கு தந்தது. இது பெரிய சர்ச்சைக்குரிய விசியகமாக மாறியது. “ ஒரு மாதத்திற்கு முன்பே விருது தருகிறோம் வாருங்கள் “ என்று அழைத்ததாக விஜய் மேடையிலேயே சொல்லிவிட்டார். ரசிகர்களோ நாங்கள் வேலையில்லாமல்லா இணையத்திலும் குறுஞ்செய்தி மூலமாக வாக்களித்தோம் என்று பொங்கினார்கள். இந்த முறைக்கு கமல் தனுஷ் தவிர பெரிய நடிகர் என்று யாரும் வரவில்லை. யாருக்கு தருவார்கள் பாவம். #இரஜினி #விஜய் #அஜித் #சூர்யா போன்ற நடிகருக்குத் தந்தால் நன்றாக இருக்கும் வருமானமும் வரும் என்று நினைத்தார்கள் ஆனால் அவர்கள் ஆசையில் மண்!.

சாணியை கரைத்து அடித்த சிவகார்த்திகேயன்!

விஜய் டிவி சிவகார்த்திகேயனை எப்போதும் எங்கள் வீட்டு பிள்ளை என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும். ஆனால் இந்த முறையோ “இந்த நிகழ்ச்சியோ அதிகாலை 2 மணிவரை போகும். நமக்கு குடிக்க தண்ணிக் கூடத் தரமாட்டாங்க, அடுத்த முறை வரும்போது நாம எல்லாம் புளிசோறு தக்காளிசோறு கட்டிக்கொண்டு வந்தறலாம்” என்று விஜய் டிவியின் முகத்தில் சாணியை கரைத்து அடித்துவிட்டு, துல்கர் சல்மானுக்கு விருது வழங்கிவிட்டு பாதியிலேயே கிளம்பினார். #விஜய்_டிவிக்கு_இந்த_அவமானம்_தேவைதான். இரசிகர்களின் மைண்டுவாய்ஸ்!.

விஜய் அவார்ட்ஸ் இல்ல பொய் அவார்ட்ஸ்!

இரசிகர்கள் இணையத்தில் விஜய் டிவியை அடித்து கிழித்து காயப்போட்டுவிட்டார்கள். அதில் முக்கியமானவை #விஜய்_அவார்ட்ஸ்_இல்ல_பொய்_அவார்ட்ஸ் முக்கியமாக #RIPVijayAwards என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரென்ட் ஆனது. இதற்குமேல் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேச எங்களுக்கு விருப்பமும் இல்லை.

No comments:

Post a Comment