Monday, 3 November 2014

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 கடகம்

சனிப்பெயர்ச்சி 2014 – 2017 கடகம்

கடகம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம் என்று சிறப்பித்து அழைக்கப்படும்.

எந்த கிரகம் இந்த ஐந்தாமிடத்தில் இருந்தாலும் நிச்சயமாக நல்ல பலங்கள் தான் நடக்கும். மேலும் ராசியில் உங்கள் ராசியின் பாக்கியாதிபதியும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருபவருமான குரு உச்சமாக இருக்கும் காரணத்தால் எந்தவிதமான கெடுதியும் வராது. இருந்தாலும் சனி தன்னுடைய குணத்தை காண்பிக்கவே செய்யும் கொஞ்சம் கெட்ட பலனும் வரும் அதை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் தற்காத்துக் கொள்ளலாம். புத்தி கொஞ்சம் சரியாக செயல்படாது முடிவுகள் எடுப்பதில் அவ்வப்பொழுது தடுமாற்றம் உண்டாகும், மனம் கலங்கும். நினைத்தவை தாமதமாக நடக்கும், விபத்து ஏற்படலாம் கவனம் தேவை.

தேவையில்லாமல் பணம் அதிகமாக விரயமாகும் அன்றாட செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும். தேவைக்கு மட்டும் செலவழிங்கள், உருப்படியாக ஒன்றும் செய்ய இயலாது, எல்லாரும் தகராறு பண்ணுவாங்க உறவினர்கள் எல்லோருமே பகையாகிவிடுவார்கள், குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும் பேச்சை குறையுங்கள் தினசரி கோயிலுக்கு செல்வது மனக்கஷ்டத்தை குறைக்கும்.

கடகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

No comments:

Post a Comment